நீர்வரத்து கால்வாய்களை முன்னெச்சரிக்கையாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
உத்திரமேரூர், செப். 9– உத்திரமேரூர் சித்தேரி மற்றும் பெரிய ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேறும்
உத்திரமேரூர் சித்தேரி மற்றும் பெரிய ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் சினேகா நேற்று அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களை சீரமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 8 நீர்வரத்து கால்வாய்கள் குன்றத்தூர் வட்டத்தில் 6 நீர்வரத்து உபரி நீர் கால்வாய்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள 6 நீர்வரத்து உபரி நீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன,.
மேலும், உத்திரமேரூர் வட்டத்தில் இரண்டு ஏரிகளின் நீர்வரத்து மற்றும் உபரி நீர் கால்வாய்களும் என, 22 கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை நீர்வளத் துறையின் மூலம் ரூ.3.17 கோடி மதிப்பீட்டில், டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, உத்திரமேரூர் சித்தேரியில், மதகு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.



