Arts, culture, entertainment and media
நீர்வரத்து கால்வாய்களை முன்னெச்சரிக்கையாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
உத்திரமேரூர், செப். 9– உத்திரமேரூர் சித்தேரி மற்றும் பெரிய ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேறும்
உத்திரமேரூர் சித்தேரி மற்றும் பெரிய ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் சினேகா நேற்று அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களை சீரமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 8 நீர்வரத்து கால்வாய்கள் குன்றத்தூர் வட்டத்தில் 6 நீர்வரத்து உபரி நீர் கால்வாய்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள 6 நீர்வரத்து உபரி நீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன,.
மேலும், உத்திரமேரூர் வட்டத்தில் இரண்டு ஏரிகளின் நீர்வரத்து மற்றும் உபரி நீர் கால்வாய்களும் என, 22 கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை நீர்வளத் துறையின் மூலம் ரூ.3.17 கோடி மதிப்பீட்டில், டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, உத்திரமேரூர் சித்தேரியில், மதகு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மாவட்டம் முழுதும் சுமார் 16 ஏரிகளில் உள்ள மதகுகள் சீரமைக்க கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. என, கலெக்டர் சினேகாவிடம் நீர்வளத் துறை செயற்பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இப்பணிகளையும் மழைக்காலத்திற்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டும் என, கலெக்டர் சினேகா, அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபும் மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் வரத்து கால்வாயில் உள்ள முட்புதர்கள், குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு கால்வாய் துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத்துறை மூலம் 38 கி.மீ., நீளத்திற்கு நடைபெற்று வரும் 22 நீர்வரத்து கால்வாய்கள் துார் வாரும் பணிகளை அக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சித் துறைகள் மூலம் ஏரி நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகள், குளங்கள் முன்கூட்டியே துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட வேண்டும்.
அதை தொடர்ந்து, பருவ மழையால், பாதிப்பு ஏற்படாத வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் சினேகா, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர்கள் கோவிந்தராஜன், கண்ணன், உத்திரமேரூர் வட்டாட்சியர் நடராஜன் மற்றும் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.