தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.79 கோடி மோசடி கடலுாரில் பலே வாலிபர் கைது: 4 பேருக்கு வலை
கடலுார், செப். 18– தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.79 கோடி மோசடி செய்த பலே வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.79 கோடி மோசடி செய்த பலே வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேரை தேடிவருகின்றனர்.
கடலுார் அண்ணா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா. இவர் எஸ்.வி.எம்., தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தினார். ஆட்களை சேர்த்து விட்டால் கமிஷன் தருவதாக கூறினார். அதனை நம்பி, வன்னியர்பாளையத்தை சேர்ந்த கணேஷ்குமார் மனைவி சாந்தி, தமக்கு தெரிந்த 97 நபர்களை சீட்டில் சேர்த்து விட்டுள்ளார். இவர்கள் தீபாவளி சீட்டில் ரூ.38.10 லட்சம் கட்டினர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கடந்த 2025 தீபாவளிக்கு முன் நகைகளை கேட்டபோது, தீபாவளி பண்டு சீட்டு நிறுவனத்தின் பங்குதாரரான விஷ்ணுபிரியாவின் அண்ணன் விைனயன், அவரது மனைவி ஹசீனா, தாய் கல்பனா, தங்கை வினிதா, பங்குதாரரான குறிஞ்சிப்பாடி விக்கி ஆகியோர் தங்கம் விலை அதிகமாகி விட்டது, பணம் தான் தர முடியும் என கூறினர். ஆனாலும் பணத்தையும் தராமல் காலம் கடத்தி வந்தனர்.


