Lifestyle and human interest
ரூ.1.79 கோடி சீட்டு மோசடி ஒருவர் கைது

கடலுார்: கடலுார், அண்ணா நகரை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா. எஸ்.வி.எம்., தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தினார். தீபாவளிக்கு நகை உட்பட ஏராளமான பொருட்கள் தருவதாக தெரிவிக்கப்பட்டது.
வன்னியர்பாளையத்தை சேர்ந்த சாந்தி, தனக்கு தெரிந்த, 97 நபர்களை சீட்டில் சேர்த்தார்.
சீட்டு கட்டியவர்கள், 2025ல், தீபாவளிக்கு முன் நகைகளை கேட்டபோது, தீபாவளி பண்டு சீட்டு நிறுவன பங்குதாரரான விஷ்ணுபிரியாவின் அண்ணன் வினையன், 36. அவரது மனைவி ஹசீனா, குறிஞ்சிப்பாடி விக்கி ஆகியோர், 'தங்கம் விலை அதிகமாகி விட்டது; பணம் தான் தர முடியும்' என கூறி, காலம் கடத்தினர்.
கடலுார் எஸ்.பி.,யிடம் சாந்தி புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், தீபாவளி சீட்டு என்ற பெயரில் பலரிடமும், 1.79 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
போலீசார், கடலுார், ஆனைக்குப்பத்தில் இருந்த வினையனை நேற்று கைது செய்தனர். மேலும் மூன்று பேரை தேடுகின்றனர்.