உளுந்தூர்பேட்டையில் இளைஞரை சவுக்கு தோப்புக்குள் தூக்கிச் சென்று தாக்கி நகை, பணம் கொள்ளை
கள்ளக்குறிச்சி,கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வேலை முடிந்து தனியாக வீட்டிற்கு திரும்பிய இளைஞரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து, சவுக்கு தோப்புக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வேலை முடிந்து தனியாக வீட்டிற்கு திரும்பிய இளைஞரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து, சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் வசந்தவேல். இவர், இன்று (புதன்கிழமை) தனது வேலைகளை முடித்து விட்டு தனியாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் நைனாகுப்பம் மற்றும் மத்தியனூர் கிராமங்களுக்கு இடைப்பட்ட ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வழியாக சென்றபோது, அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வசந்தவேலை வழிமறித்தனர்.
இதையடுத்து அவரை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். பின்னர், வசந்தவேல் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்தனர். மேலும், அவரது செல்போனை பறித்த கொள்ளையர்கள், அதிலிருந்த கூகுள் பே ஆப் மூலம் ரூ. 28,000 பணத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டனர்.

