சென்னையில் 34 மின் மோட்டார்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை,தண்டையார்பேட்டை , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களில் உள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள
தண்டையார்பேட்டை , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களில் உள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 34 குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல். இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நேற்று தண்டையார்பேட்டை , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களில் உள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 34 குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் அழுத்த குறைபாடு தவிர்க்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் சீரான மற்றும் சமமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யும் வகையில் மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

