சாலை விபத்தில் ஆயுதப்படை நிலைக் காவலர் உயிரிழப்பு..!
தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அமைச்சரின் வீட்டு பாதுகாப்பு பணிக்கு சென்ற ஆயுதப்படை நிலைக் காவலர் மயிலேறி என்பவர் உயிரிழந்தார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வீட்டிற்கு பாதுகாப்பு பணிக்கு மயிலேறி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பகுதியில் மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

