அமைச்சர் பாதுகாப்புக்கு சென்ற காவலர் விபத்தில் பலி

துாத்துக்குடி: துாத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்த மயிலேறி, 45, ஆயுதப்படையில் நிலை காவலராக பணியாற்றினார். துாத்துக்குடி, போல்டன்புரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வீட்டில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டார்.
இதற்காக, பைக்கில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் இருந்து புறப்பட்டார். அரசு மருத்துவ கல்லுாரி பகுதியில், சாலையில் திரும்பிய போது, எதிரே வந்த பைக் மோதியதில், மயிலேறி துாக்கி வீசப்பட்டு இறந்தார்.
தென்பாகம் போலீசார், விபத்து ஏற்படுத்திய சண்முகநாதன், 24, என்பவரை கைது செய்தனர்.