முன்னாள் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர்
திருத்தணி: முன்னாள் ஜனாதிபதி மறைந்த ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு, திருவள்ளூர் கலெக்டர் கவிதா, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருத்தணி அரசு கலை கல்லுாரி வளாகத்தில், கடந்தாண்டு அரசு சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 23 அடி உயரமுள்ள முன்னாள் ஜனாபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது.
நேற்று, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு திருவள்ளூர் கலெக்டர் கவிதா மாலை அணிவித்தார். அப்போது, த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்கள் கும்மிடிப்பூண்டி விஜயகுமார், திருவள்ளூர் அருண்குமார், ஆவடி ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
