Politics
முன்னாள் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர்
திருத்தணி: முன்னாள் ஜனாதிபதி மறைந்த ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு, திருவள்ளூர் கலெக்டர் கவிதா, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருத்தணி அரசு கலை கல்லுாரி வளாகத்தில், கடந்தாண்டு அரசு சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 23 அடி உயரமுள்ள முன்னாள் ஜனாபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது.
நேற்று, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு திருவள்ளூர் கலெக்டர் கவிதா மாலை அணிவித்தார். அப்போது, த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்கள் கும்மிடிப்பூண்டி விஜயகுமார், திருவள்ளூர் அருண்குமார், ஆவடி ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், கலெக்டர் கவிதா பேசுகையில், ‘விரைவில் இடம் தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதிக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இதையடுத்து, திருத்தணி ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள, 10 அடி உயரமுள்ள ராதாகிருஷ்ணன் சிலைக்கு, திருத்தணி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கோ.அரி, வெங்கடாபுரம் மக்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன், திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றதால், அங்குள்ள அவரது சிலைக்கு. பள்ளி தலைமை ஆசிரியை சுமதி மற்றும் ஆசிரியர்கள் மாலை அணிவித்தனர்.
இதுதவிர, ராதாகிருஷ்ணன் பிறந்த கிராமமான, திருத்தணி வெங்கடாபுரம் கிராமத்தில் இளைஞர்கள் சார்பில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கினர்.