மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பஸ் மோதி 2 வாலிபர்கள் உயிரிழப்பு
கீழ்பென்னாத்தூர்,கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் வேடியப்பன். இவரது மகன் செல்வம் (வயது 25). பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்தார். அதே கிராமத்தில் உள்ள புதுத்தெருவை சேர்ந்த ராஜா ராமன் மகன் பரத் (23). இவர் சென்னையில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
நண்பர்களான செல்வம் மற்றும் பரத் ஆகிய இருவரும் சொந்த ஊரான வழுதலங்குணம் கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் திருமண விழாக்களில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வந்திருந்தனர்.


