மேம்பாலத்தில் மின் விளக்குகள் பழுது: 7 மாதத்தில் 50 விபத்துகள்
செங்கல்பட்டு, செப். 7– செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையின் ரயில்வே மேம்பாலத்தில், பழுதடைந்த மின்
செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையின் ரயில்வே மேம்பாலத்தில், பழுதடைந்த மின் விளக்குகள் ஏழு மாதங்களாக சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர்.
செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
ரயில்வே மேம்பாலத்தின் இரு பகுதியிலும், மின் விளக்குகள் அமைத்து மேலமையூர் ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.



