அ.தி.மு.க மாஜிக்களின் மாலை நேர மீட்டிங்... அசரீரியின் அட்டகாசம்!
என் அன்புச் சொந்தங்களே, வரலாற்றுத் தங்கங்களே, சிகரங்களைச் செதுக்குகின்ற சிங்கங்களே, காற்றோடு கைகொடுக்கும் கனல் நெருப்புகளே...
‘நாம அவசரப்பட்டுட்டோமோ...’ - இப்படியொரு ஏக்கம், அ.தி.மு.க-விலிருந்து த.வெ.க பக்கம் சென்ற மாஜிக்கள் மனங்களில் எழுந்திருக்கிறதாம். இந்த நிலையில், ஒரு மாலை வேளையில் பழைய கூட்டாளிகள் அனைவரும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும் எனக் கற்பனையைத் தட்டிவிட்டோம்... (அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அசரீரியும் இவர்களோடு இணைந்துகொள்கிறது)
(ஏற்கெனவே அனைவரும் அசம்பிள் ஆகிவிட, கடைசியாக ஆவேசமாக அறைக்குள் வருகிறார் இசக்கி சுப்பையா).


