தூத்துக்குடி அருகே விவிலியக் கண்காட்சியில் உணவருந்திய 64 பேருக்கு உடல்நலக் குறைவு
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற விவிலியக் கண்காட்சியில் உணவருந்திய சுமாா் 64 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
தருவைகுளம், புனித மிக்கேல் அதிதூதா் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விவிலியக் கண்காட்சி, நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் பொதுமக்கள் வீடுகளில் தயாரித்து கொண்டு வந்த உணவுப் பொருள்களும் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மதியம் வழங்கப்பட்ட பிரியாணி உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில், சுமாா் 64 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டது.


