Lifestyle and human interest
கண்காட்சியில் உணவருந்திய 30 பேருக்கு வாந்தி, மயக்கம்
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச்சில், பைபிள் கண்காட்சி நேற்று நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தயாரித்த பல்வேறு வகை உணவுகளை கண்காட்சியில் வைத்தனர். அவற்றை சாப்பிட்ட, 30 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அவர்கள், துாத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தருவைகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
கண்காட்சியில் பரிமாறப்பட்ட உணவுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.