கோடங்கிபட்டி சாலையில் கூடுதல் விளக்கு தேவை
கரூர்:கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி வழியாக திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் பகுதிகளுக்கு, பஸ்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
கோடங்கிப்பட்டியில் இருந்து, பத்தாம்பட்டி வரை, சாலையின் இருபுறங்களிலும் போதுமான தெரு விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.இந்த சாலையில், ஆபத்தான வளைவுகள் உள்ளதால், அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி, செயின் பறிப்பு போன்ற வழிப்பறி சம்பவங்கள் நடக்க ஏதுவாக அமைகிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி, கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
