தனுஷின் 'ஓம்' ரிலீஸ் தள்ளிப்போகிறதா? நாளை தொடங்குகிறா D56? களத்தில் இறங்கிய தனுஷ் - பரபர அப்டேட்கள்
தனுஷின் 56வது படமான தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தின் துவக்க விழா நாளை மதுரையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் 17ம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு தனுஷின் படப்பூஜையை..
தனுஷின் 56 வது படமான 'லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ள படத்தின் படப்பூஜை மதுரையில் நாளை நடப்பதாக இருந்தது, இப்போது தள்ளிப்போயிருக்கிறது. இதற்கிடையே ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'ஓம்' படத்தின் ரிலீஸிலும் மாற்றம் வரவிருக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
தனுஷ் இப்போது ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் 'ஓம்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, ஸ்ரீலீலா, சாய்பல்லவி, நஸ்ரூதின் ஷா, இந்திரன்ஸ் எனப் பலரும் நடித்துள்ளனார். மம்மூட்டியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான 'ஓம்' படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரமான பர்மா கார்த்திகேயன் இன்ட்ரோ வீடியோ வைரலானது.


