நியூஸ்18 தோரணம் ஆயிரம் உணவுத் திருவிழா.. நெல்லையில் கோலாகல தொடக்கம்.!
நெல்லையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் நடைபெறும் தோரணம் ஆயிரம் நிகழ்ச்சியை பொது மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நெல்லையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் தோரணம் ஆயிரம் உணவுத் திருவிழா கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
நெல்லையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் நடைபெறும் தோரணம் ஆயிரம் நிகழ்ச்சியை பொது மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். நெல்லை வர்த்தக மையத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் 3 நாட்கள் நடைபெறும் தோரணம் ஆயிரம் உணவுத்திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. விழாவை நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், தொடங்கி வைத்த நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



