சிறப்பு மருத்துவ முகாமில் 66 பேருக்கு அடையாள அட்டை
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுாரில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாமில், 66 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் திருக்கோவிலுார் அரசு தலைமை மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் கமலசேகரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ராஜேஸ்வரி, மனநல மருத்துவர் சரவணன், கண் மருத்துவர் கிருத்திகா, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற பரிசோதித்தனர்.
