மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 46 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த மருத்துவ முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் தினேஷ்குமார், காது மூக்கு தொண்டை டாக்டர் குத அலி பக்ஷ், மன நல டாக்டர் ஜெயசீலன், கண் டாக்டர் கோமதி ஆகியோர் மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்தனர்.
இதில், 40 சதவீதத்திற்கும் அதிகமாக உடல் பாதிப்புடைய 46 பேருக்கு யு.டி.ஐ.டி., பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.