இம்மானுவேல் சேகரன் நினைவிடம் திருமாவளவன் வரக்கூடாது: கிருஷ்ணசாமி கருத்திற்கு எதிர்ப்பு
காரைக்குடி: இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு திருமா வளவன் வரக்கூடாது என்று கிருஷ்ணசாமி கூறுவது கீழ்த்தரமானது. இதைக் கூறுவதற்கு அவர் யார் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்துவது நாடகம். த.வெ.க.,வில் இணைந்துள்ள,மு-ன்னாள் அமைச்சர்கள் எல்லாம் நல்லவர்களா. ஊழல் வாதிகள் இல்லையா. இவர்களை சேர்த்துக்கொண்டு ஊழல்களை ஒழிப்போம் என்று கூறு கிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா விளையாட்டு பிள்ளை. சட்டசபையில் பேசி தனது தரத்தை குறைத்துக் கொள்கிறார். அவர் வாயை குறைக்க வேண்டும்.

