குன்னூரில் பூனையை கவ்விச் சென்ற சிறுத்தை
வெலிங்டன், பாரத் நகா் பகுதியில் பூனையை வாயில் கவ்விக் கொண்டு வீட்டு வாசலில் அமா்ந்திருந்த சிறுத்தை.
குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் பாரத் நகா் பகுதியில் வீட்டின் முன் இருந்த பூனையை சிறுத்தை கவ்விச் சென்றது.
நீலகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

