நில பட்டா மாற்ற ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
தார்வாட்: கர்நாடகாவில், ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை மாற்ற, 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவின் தார்வாட் மாவட்டம், யரிகொப்பா கிராமத்தில் 33 ஏக்கர் நிலத்தை, ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வாங்கி குடியிருப்பு கட்ட திட்டமிட்டது. இந்த நிலங்களை, விவசாயம் செய்ய முடியாத நிலமாக பட்டா மாற்ற முடிவு செய்தது.
இதற்காக தார்வாட் தாசில்தார் சச்சிதானந்த் குச்சனுரை, ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் நேற்று முன்தினம் காலை சந்தித்தனர். அப்போது, நிலத்தை மாற்றித்தர ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் இரண்டு ஏக்கர் நிலம் லஞ்சமாக தரும்படி தாசில்தார் கேட்டார். இதை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஏற்றுக் கொண்டனர்.


