பிரேக் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களால் விபத்து அறிக்கை சமர்ப்பிக்க, சான்று சரிபார்க்க பணிச்சுமை
விருதுநகர்: மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பிரேக் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களால் விபத்து அறிக்கை சமர்ப்பிக்க, சான்று சரிபார்க்க பணிச்சுமை அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து எல்லைகள் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் யூனிட் அலுவலகங்கள் வைக்கப்பட்டு அருப்புக்கோட்டை விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலும், ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டிலும் இயங்கி வருகிறது.
டிரைவிங் லைசென்ஸ், எப்.சி., உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பிரேக் இன்ஸ்பெக்டர் கிரேடு 1 பணியிடத்தில் பணிபுரிவோர் தான் 304ஏ எனும் உயிரிழப்பு விபத்துக்களில் வாகனங்களை ஆய்வு செய்து மோட்டார் வாகன அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பர்.


