போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி துவக்கம்
பெங்களூரு: பெங்களூரிலுள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகளில் சிக்கி, பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி நேற்று துவங்கியது.
பெங்களூரிலுள்ள போலீஸ் நிலையங்கள், அதன் சுற்றுப்புற பகுதிகளில் வழக்குகளில் சிக்கி பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கிலான வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியை நேற்று அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா துவங்கி வைத்தார். முதல் கட்டமாக, ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.




