போலாந்து: தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது மோதிய ரெயில் - வைரல் வீடியோ
வார்சா,போலாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு போலாந்து. இந்நாட்டின் கடன்ஸ் நகரில்
போலாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், அந்த தண்டவாளத்தை நேற்று மதியம் லாரி கடக்க முன்றது. அப்போது ரெயில் வருவதற்கான நேரம் ஆனதால் உடனடியாக ரெயில்வே தண்டாளத்தின் கதவுகள் மூடப்பட்டன. இதனால், லாரி ரெயில்வே தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது.
அப்போது, ஹிடினா நகரில் இருந்து சிலோனா கொரா நகருக்கு வேகமாக வந்த பயணிகள் ரெயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் லாரியின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. அதேபோல், லாரியில் இருந்த டிரைவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.


