மும்மொழி கொள்கை: நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்புக்கு விலக்கு தர சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
புதுடில்லி:'மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் இருந்து இந்த ஆண்டு 6ம் வகுப்புக்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் பரிசீலிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், 'தேசிய கல்வி கொள்கை - 2020' அடிப்படையில் பாட நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்தது. குறிப்பாக 6ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை கட்டாயம் என உத்தரவிட்டது. இந்த புதிய நடைமுறை கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
புதிய நடைமுறையின்படி, மூன்று மொழிகளை மாணவர்கள் பயில வேண்டும். அவற்றில் இரண்டு மொழிகள் கட்டாயம். அந்த இரு மொழிகளும் இந்திய மொழியாக இருக்க வேண்டும். ஒரு மொழி மட்டும் வெளிநாட்டு மொழியாக இருக்கலாம். இவற்றில் ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

