Crime, law and justice
CBSE | 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு? - உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

CBSE | மும்மொழி கொள்கையிலிருந்து 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 இந்திய மொழிகள் உள்பட மூன்று மொழிகளை கற்பது கட்டாயமாக்கப்படுவதாக சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய் பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஎஸ்இயின் புதிய சுற்றறிக்கையின்படி, மூன்று மொழிகளைக் கற்பதில் இருந்து நடப்பாண்டு 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க சிபிஎஸ்இயிடம் நீதிபதிகள் அமர்வு கேட்டுக்கொண்டது.
இது மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் பெரிய அளவில் நிவாரணமாக அமையும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆனது? | Kolathur VS Babu
உச்ச நீதிமன்றத்தின் இந்த கோரிக்கையை ஏற்று, சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் இந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
