மக்கள், போலீஸ் நல்லுறவு கிரிக்கெட் டேஞ்சர்ஸ் யூத் அணி ‘சாம்பியன்’
சென்னை: புழல் மக்கள் மற்றும் போலீசார் இடையே, நல்லுறவை ஏற்படுத்தும்விதமாக நடந்த கிரிக்கெட் போட்டியில், கொளத்துார் போலீஸ் அணியை தோற்கடித்து, டேஞ்சர்ஸ் யூத் ‘ஏ’ அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
புழல் காவல் மாவட்ட போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே, நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், ஒரு நாள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி, புழல் பாலாஜி நகர் மைதானத்தில் நேற்று நடந்தது. இதன் இறுதி போட்டியில், கொளத்துார் போலீஸ் மற்றும் புழல் டேஞ்சர்ஸ் யூத் ‘ஏ’ அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கொளத்துார் போலீஸ் அணி, முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டேஞ்சர்ஸ் யூத் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. விக்கெட்டுகள் சரிந்தாலும், இலக்கை நோக்கி வீரர்கள் போராடினர்.




