Sport
தொழிற்சாலைகளுக்கு இடையே கிரிக்கெட் டி.வி.எஸ்., மோட்டார் அணி சாம்பியன்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காவேரி மருத்துவமனை மற்றும் ஓசூர் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சார் பில்,
மாவட்டம், ஓசூர் காவேரி மருத்துவமனை மற்றும் ஓசூர் இன்டஸ்ட்ரீஸ்
அசோசியேஷன் சார் பில், தொழிற்சாலைகளுக்கு இடையேயான, 7ம் ஆண்டு
ஓசூர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்தன. மொத்தம், 48 தொழிற்சாலை
அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டியில், டி.வி.எஸ்., மோட்டார்
மற்றும் டெனக்கோ ஆட்டோமோட்டிவ் இந்தியா அணிகள் மோதின. இதில், 23
ரன்கள் வித்தியாசத்தில் டி.வி.எஸ்., மோட்டார் அணி வெற்றி பெற்று
சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
நடராஜன், வெற்றி பெற்ற டி.வி.எஸ்., மோட்டார் அணிக்கு முதல் பரிசாக, ஒரு
லட்சம் ரூபாய் மற்றும் பரிசு கோப்பையை வழங்கினார். இரண்டாமிடம் பெற்ற
டெனக்கோ அணிக்கு, 75,000 ரூபாய், பரிசுக்கோப்பை, மூன்றாமிடம் பெற்ற
பஸ்ட் ஸ்டெப்ஸ் பேபி வேர் அணிக்கு, 50,000 ரூபாய், பரிசுக்கோப்பையை
வழங்கினார்.
ஓசூர் காவேரி மருத்துவமனை குழும செயல் இயக்குனர் விஜய
பாஸ்கரன், மருத்துவமனை மருத்துவ இயக்குனர் அரவிந்தன், பொதுமேலாளர்
ஜோஸ் வர்க்கீஸ் ஜாய் உட்பட பலர் பங்கேற்றனர்.
