3 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் உயிரி எரிவாயு திட்டம் ரூ.1.80 கோடியில் செலவிட்டது வீண்
காஞ்சிபுரம், செப். 8– காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பகுதியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பகுதியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயோகால் எனும் உயிரி எரிவாயு மற்றும் மின் உற்பத்தி மையம், மூன்று ஆண்டுகளாக முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2016ல், அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில 22-வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு குப்பை கிடங்கு வளாகத்தில் பயோகாஸ் திட்டம் தொடங்கப்பட்டது.
புனே, பெங்களூரு போன்ற பெருநகரங்களின் கழிவு மேலாண்மை முறையைப் பின்பற்றி உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் இறைச்சிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது.


