ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை, ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டாலும் பயனாளிகள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஓய்வூதியம்இதுதொடர்பாக வெளியிடப்
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் 35,37,372 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
இவர்களில், சுமார் 15,56,674 ஓய்வூதியப் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026-ல் வழங்கப்படும்) ஓய்வூதியத்தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளது.



