Science and technology
ஓய்வூதியம் வழங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம் வருவாய் துறை நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் ஆதரவற்ற பெண்கள், முதியோர் ஓய்வூதியம் வழங்குவதில், விண்ணப்பங்களின் அடிப்படை தகவல்களை, தானியங்கி முறையில் சரிபார்த்து, உடனடியாக ஒப்புதல் வழங்கும் முறை, நடப்பு ஆண்டில் அமல் படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்கள் வாயிலாக, தற்போதைய நிலவரப்படி, 35.29 லட்சம் பேர், பல்வேறு பிரிவுகளில், ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதிய திட்டம் என, ஒன்பது தலைப்புகளில் ஓய்வூதியங்கள் வ ழங்கப்படுகின்றன.
இதில் பயன் பெற, மக்கள் தாலுகா அலுவலகங்கள் சென்று, மனு கொடுக்கும் நிலை, தற்போது மாறியுள் ளது. 'இ -சேவை' மையங்கள் வாயிலாக விண்ணப்பித்தால் போதும் என, அரசு அறிவித்துள்ளது.
இதில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, தாலுகா அலுவலகங்களில் முடிவு எடுப்பதில், அதிக தாமதம் ஏற்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், வருவாய் துறையில், இது போன்ற நிர்வாக நடைமுறை தாமதங்களை குறைக்க, அரசு உத்தரவிட்டது.
இதன்படி, மக்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை துரிதப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஓய்வூதிய திட்டங்களில் விண்ணப்ப பரிசீலனையில், அதிகாரிகள் நிலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தாசில்தாருக்காக காத்திருக்காமல், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், இதில் முடிவு எடுக்கும் வகையில், அதிகார மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பரிசீலனை பணிகளை, தானியங்கி முறையில் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டு உ ள்ளனர்.
இது குறித்து, வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியம் தொடர்பாக, அதிக அளவில் விண்ணப்பங்கள் வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை வரம்பு உள்ளது.
இதில் ஏற்படும் வாய்ப்பு அடிப்படையில், விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை, 30 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிட்டு இருக்கிறோம்.
வருவாய் துறை இணைய தளத்தில், 'டேட்டா பியூரிட்டி' தகவல் துாய்மை என்ற அடிப்படையில், தானியங்கி முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், வாய்ப்பு அடிப்படையில், ஓய்வூதிய விண்ணப்பங்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்கப்படும் .
ஒரு நபர் ஒரே சமயத்தில், வேறு திட்டங்களின் பயனாளியாக இருக்கிறாரா என்பதை, சில நிமிடங்களில் அறிந்து, அவரது விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதனால், தகுதியான விண்ணப்பங்களுக்கு, உடனடி ஒப்புதல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.