நந்தன் கால்வாய் சீரமைக்க நிதி ஒதுக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்
செஞ்சி: நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் ‘பெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட நந்தன் கால்வாய் பகுதிகளை சீரமைக்க நிதி ஒதுக்காதது விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பனமலை ஏரிக்கு திருவண்ணாமலை மாவட்டம் கீரனுார் அணைக்கட்டில் இருந்து துறிஞ்சல் ஆற்று தண்ணீரை கொண்டுவர 37.86 கி.மீ., துாரத்திற்கு நந்தன் கால்வாய் அமைத்தனர்.
இதன் மூலம் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள, 36 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் 6,654 ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.




