குவியும் போக்சோ! சீரழியும் சட்டம்-ஒழுங்கு!
முந்தைய தி.மு.க. அரசின் பொருளாதார இலக்குக்குப் போட்டியாக, த.வெ.க. ஆட்சியில் தமிழக பொருளாதாரம் 1.5 ட்ரில்லியனை எட்டிப்பிடிக்கும் என்றார்கள் த.வெ.க. அமைச்சர்கள். த.வெ.க. ஆட்சியில் பொருளாதாரம் உயருகிறதோ... இல்லையோ, போக்சோ வழக்குகளில் உச்சம் தொடும் போலிருக்கிறது.
சமீப காலமாக போக்சோ வழக்குகள் அதிகமாகப் பதிவாகத் தொடங்கியுள்ளன. த.வெ.க. ஆட்சியில் இளஞ் சிறார்கள், குழந்தைகள் பாது காப்பாக இல்லையென்பதையே இது காட்டுகிறது. ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 5 வரை ஊடகக் கவனம் பெற்ற சில போஸ்கோ வழக்குகளைப் பட்டிய லிட்டுள்ளோம்.
கிரானைட் விற்பனையில் பெரும் புள்ளியான சென்னையைச் சேர்ந்த ஆர்.வீரமணி, தேனாம்பேட்டையிலுள்ள ஒரு வீட்டுக்கு, தன்னுடைய உதவியாளர்களான சாந்தி, மகேந்திர சிம்மனை வைத்து சிறுமியொருத்தியை அழைத்துவரச் செய்து பாலியல் அத்துமீறல் செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதன் பின்னணியை நோக்கும் பத்திரிகையாளர்கள், இது அமெரிக்காவின் எஃப்ஸ்டீன் பைல்ஸ் போன்று பெரிய பின்னணியைக் கொண்டதாக இருக்கலாம் எனச் சந்தேகிக் கிறார்கள். ஒரு பென்-டிரைவில் கிடைத்த வீடியோ அடிப்படையில் இந்த வழக்கு தொடங்கியது. வீரமணிக்கு உதவியாக வீட்டை நிர்வகித்ததாகக் கூறப்படும் தம்பதியரும் போக்சோ சட்டத்தின் 7, 8, 15(1), 21(1) பிரிவுகள் மற்றும் ஒப ஆஸ்ரீற் 67 பிரிவில் வழக்குப் பதியப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

