Politics
குவியும் போக்சோ! சீரழியும் சட்டம்-ஒழுங்கு!

முந்தைய தி.மு.க. அரசின் பொருளாதார இலக்குக்குப் போட்டியாக, த.வெ.க. ஆட்சியில் தமிழக பொருளாதாரம் 1.5 ட்ரில்லியனை எட்டிப்பிடிக்கும் என்றார்கள் த.வெ.க. அமைச்சர்கள். த.வெ.க. ஆட்சியில் பொருளாதாரம் உயருகிறதோ... இல்லையோ, போக்சோ வழக்குகளில் உச்சம் தொடும் போலிருக்கிறது.
சமீப காலமாக போக்சோ வழக்குகள் அதிகமாகப் பதிவாகத் தொடங்கியுள்ளன. த.வெ.க. ஆட்சியில் இளஞ் சிறார்கள், குழந்தைகள் பாது காப்பாக இல்லையென்பதையே இது காட்டுகிறது. ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 5 வரை ஊடகக் கவனம் பெற்ற சில போஸ்கோ வழக்குகளைப் பட்டிய லிட்டுள்ளோம்.
கிரானைட் விற்பனையில் பெரும் புள்ளியான சென்னையைச் சேர்ந்த ஆர்.வீரமணி, தேனாம்பேட்டையிலுள்ள ஒரு வீட்டுக்கு, தன்னுடைய உதவியாளர்களான சாந்தி, மகேந்திர சிம்மனை வைத்து சிறுமியொருத்தியை அழைத்துவரச் செய்து பாலியல் அத்துமீறல் செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதன் பின்னணியை நோக்கும் பத்திரிகையாளர்கள், இது அமெரிக்காவின் எஃப்ஸ்டீன் பைல்ஸ் போன்று பெரிய பின்னணியைக் கொண்டதாக இருக்கலாம் எனச் சந்தேகிக் கிறார்கள். ஒரு பென்-டிரைவில் கிடைத்த வீடியோ அடிப்படையில் இந்த வழக்கு தொடங்கியது. வீரமணிக்கு உதவியாக வீட்டை நிர்வகித்ததாகக் கூறப்படும் தம்பதியரும் போக்சோ சட்டத்தின் 7, 8, 15(1), 21(1) பிரிவுகள் மற்றும் ஒப ஆஸ்ரீற் 67 பிரிவில் வழக்குப் பதியப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதே ஆகஸ்ட் 29-ஆம் தேதி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 26 வயது ரங்கநாதன், என்பவரை சின்னசேலம் அருகே கார் ஷெட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசார் போக்சோ வழக்கில் கைதுசெய்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன், 17 வயது +2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் கைதுசெய்யப் பட்டுள்ளார். சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதிசெய்யப் பட்டுள்ளது. மகேந்திரன் ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 30-ல் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கருமலைக்கூடல் போலீசார் சேலம் மேட்டூரைச் சேர்ந்த 61 வயது தனராஜை போக் சோவில் கைதுசெய்தனர்.
11 வயது சிறுமியிடம் பூமிநாதன் ஆபாச செய்கை காட்டியதாகவும், அவரது மகன் சங்கர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் அளிக்கப் பட்ட புகாரில் மதுரையைச் சேர்ந்த 56 வயது பூமிநாதன், அவரது மகன் சங்கர் போக்சோவில் கைதுசெய்யப் பட்டனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் 5 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆனந்த் என்பவரை, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் காவல்துறை போக்சோவில் கைதுசெய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், 29 வயது மீனவரான ஜெல்சனை, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போலீசார் போக்சோவில் கைதுசெய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் கல்குவாரியில் பணிபுரிந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் சுர்ஜா தேவ், வீடொன்றுக் குள் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். சிறுமி பெற்றோ ரிடம் விவரம்சொன்ன நிலையில், அவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். சம்பந்தப் பட்ட நபரை போலீஸ் தேடிவந்த நிலையில், சி.சி.டி.வி. மூலம் அடையாளம் கண்டு போலீ சார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.
திருவள்ளூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, விவகாரம் பெரிதானதும் தலைமறைவாக முயன்ற சிலம்பரசனை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைதுசெய்தனர்.
பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 64 வயது நாகூர் பிச்சை என்பவர் மீது சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் புகாரளிக்க, போலீசார் நாகூர் பிச்சையை போக்சோவில் கைதுசெய்தனர்.
13 வயது சிறுமியின் கையைப் பிடித்திழுத்து பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஊட்டியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் போக் சோவில் கைதுசெய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் சேர்க்கப்பட்டார். பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இளைஞர், அப்போது மது அருந்தியிருந்ததாகவும், போதையில் இந்த அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மாடசாமி எனும் 21 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த நாமக்கல் ராசிபுரம் 23 வயதான மணி என்ற இளைஞர் போக்சோவில் கைதுசெய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் செங்கல் சூளையில் பணிபுரிபவர்கள். சிறுமி கர்ப்பமானதும், மணியின் வீட்டில் விட்டுச்சென்றுவிட்டனர். சிறுமி பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு வந்தபோது, மருத்துவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததால் வெளியே தெரியவந்தது.
கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழும் நிலையில், மகளைப் பார்க்க வந்த தந்தை அவளிடம் அத்துமீற முயன்றிருக்கிறார். 9 வயதேயான தனது சொந்த மகளிடம் பாலியல்ரீதியாக அத்துமீற முயன்ற நிலையில், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 36 வயது தந்தையின்மீது அவரது மனைவி புகாரளித்தார். இந்நிலையில், அவர் தலைமறைவானார். எனினும் செப்டம்பர் 3-ஆம் தேதி, அவரது மறைவிடத்தைக் கண்டறிந்த போலீஸ் போக்சோவில் கைதுசெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 8-ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் கடந்த ஓராண்டாக பாலியல்ரீதி யாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளனர். இத னால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெற்றோர் கவுன்சிலிங் அழைத்துச் சென்றபோது அவரை பள்ளியில் பயிலும் 9 மாணவர்கள் ஓராண்டாகவே பாலியல் துன்புறுத்தல் செய்துவந்தது தெரிய வந்துள்ளது. பெற்றோரின் புகாரில் 9 மாணவர்கள் போக்சோவில் கைதுசெய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப் பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, பாட்டி வீட்டுக்கு வந்த இடத்தில் சிறுமிக்கு அறிமுகமான ஒருவர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனியிடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது அந்த இடத்துக்கு வந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் அவரைத் துரத்திவிட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுவர்கள் இருவர் மட்டும் சிறார் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ், அரசு உதவிபெறும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவி உள்ளிட்ட பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் புதிதாக ஒரு மாணவியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன் இதை வெளியில் சொல்லக்கூடாதெனவும் மிரட்டியுள்ளார். ஆனால், மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து தப்பியோடிய ஜெயராஜ் கைதுசெய்யப்பட்டார். போக்சோ வழக்கில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் 8-ஆம் வகுப்பு மாணவனின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவி சக மாணவர் கள் ஐந்து பேர் கொடூரமாகத் துன் புறுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் தரப்பில் பெற்றோர் புகாரளித்த நிலையில் 5 மாணவர் களும் கைதுசெய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப் பட்டனர்.
9 வயது சிறுவனிடம் பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கரூர் குளித்தலையைச் சேர்ந்த 36 வயது ரங்கநாதன் மீது பெற்றோர் புகாரளித்த நிலையில் போக்சோ வழக்குப் பதிவு செய்து கைதுசெய்யப்பட்டார். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரங்கநாதன் மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேரந்த 47 வயது சக்திவேல் பாலியல் சீண்டலில் ஈடுபட, சிறுமியோ கத்திக் கூச்சலிட்டிருக் கிறாள். இதனால் சக்திவேல் பயந்து ஓடிய நிலையில் காவல்துறையில் பெண் வீட்டார் புகாரளித்தனர். இதையடுத்து சக்திவேலை பாவூர்சத்திரம் போலீஸார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்துள்ளனர்.
போகிற போக்கைப் பார்த்தால், த.வெ.க. ஆட்சியில் போக்சோ வழக்குகளைக் கையாள வும் குற்றவாளிகளைப் பிடிக்கவும், காவல்துறை யில் தனிப் பிரிவை அமைக்கவேண்டும் போலிருக்கிறதே!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)