மதுரையில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்... வீடியோ வைரல்
மதுரையில் பள்ளி மாணவன் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. போலீசார் விசாரணைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரையில் பள்ளி மாணவன் ஒருவர் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோரிப்பாளையம் அருகே தமுக்கம் மைதானத்தைச் சுற்றி பல்வேறு கல்லூரிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த சாலையில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தின் கீழே தமுக்கம் மைதானம் - தல்லாகுளம் தபால் நிலையத்தைக் கடக்கும் பாதை ஒன்று உள்ளது.


