முத்துக்கொண்டாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
திருவாலங்காடு, செப். 17– முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையத்தை திருவள்ளூர் தொகுதி
முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையத்தை திருவள்ளூர் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., அருண்குமார் திறந்து வைத்தார்.
திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, நடப்பாண்டிற்கான சொர்ணவாரி பருவத்திற்கு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று தொடங்கப்பட்டது.
திருவள்ளூர் தொகுதி தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ., அருண்குமார், கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். உடன், திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜேஷ், த.வெ.க., மாவட்ட துணை செயலர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

