4000 பேர் அழிவின் விளிம்பில் பழங்குடியினர் எண்ணிக்கை விவரங்கள் சேகரிப்பு
கோவை: அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மக்கள் கணக்கெடுக்கும் பணியில், மாவட்டத்தில் 4,000 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகம் சார்பில், தமிழகம், கேரளம் உள்ளிட்ட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது.
75 பழங்குடியினர் பிரிவுகளை சேர்ந்த மக்களின் வீட்டு வசதி, வாழ்வாதாரம், பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரிக்கும் வகையில், டிஜிட்டல் செயலி வாயிலாக இந்த கணக்கெடுப்பு நடக்கிறது.


