திருச்சி விமான நிலையத்தில் 100 பவுன் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த பயணிகள் 4 பேரிடம் இருந்து 100 பவுன் தங்கம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த விமானத்தில் சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 4 பயணிகளின் உடைமைகளில் சந்தேகப்படும் வகையிலான பொருள் இருந்தது. இதையடுத்து, அதை பிரித்து பாா்த்தபோது 4 பேரும் பேஸ்ட் வடிவில் 22 கேரட் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.



