ரூ.1.50 கோடி கடத்தல் தங்கம் திருச்சி ஏர்போர்ட்டில் பறிமுதல்
திருச்சி: வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, திருச்சி விமான நிலையத்தில், கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சிக்கு நேற்று அதிகாலை வந்த விமான பயணியரை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான, மூன்று பயணியரின் கைப்பையை சோதனையிட்டதில், அவற்றில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 750 கிராம் தங்க செயின்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான பயணியரை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்ட போது, ஒரு பயணி, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 290 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்து, அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.