திருப்புவனம் அருகே ஆசிரியர் வீட்டில் ரூ.1.5 கோடி நகை, பணம் கொள்ளை!
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தலைமையாசிரியர் வீட்டில் 126 சவரன் நகை, ரூ.1.60 லட்சம் கொள்ளை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்புவனம் ஜெயபாரத் குடியிருப்பைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. கொந்தகை அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். மகேஸ்வரி குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில், திருடர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். பீரோவை உடைத்து உள்ளே இருந்த 126 சவரன் நகைகள், ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது திருட்டு நடந்திருப்பது மகேஸ்வரிக்கு தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து அவர் திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆதாரங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். சம்பவம் இடத்தில் எஸ்.பி., அபிஷேக் குப்தா விசாரணை நடத்தினார்.


