கடும் வறட்சி, வரலாறு காணாத வெள்ளம்.. 2027 வரை நீடிக்கும் எல் நினோவின் உக்கிரம்! விபரம் என்ன?
இந்தியாவின் பருவமழை ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் பசிபிக் பெருங்கடலில் உருவாகிவரும் மிகக் கடுமையான 'சூப்பர்' எல் நினோ (Super El Niño) காலநிலை மாற்றம் குறித்து, காலநிலை நிபுணர் பில் மெக்குயர் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரிப்பதே எல் நினோ எனப்படுகிறது. வழக்கமாக கடல் வெப்பநிலை 2°C வரை அதிகரித்தால் அதை 'சூப்பர் எல் நினோ' என்பார்கள். ஆனால், தற்போது உருவாகிவரும் எல் நினோ வெப்பநிலை 4°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உலகளாவிய காலநிலை மாற்றங்களையும் பேரழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதால், இதை 'ஹைப்பர் எல் நினோ' என்றும் குறிப்பிடலாம்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)