தாளவாடி காவல்துறையினரின் `கொடூர' தாக்குதல்; பதைபதைக்க வைக்கும் `பழைய' வீடியோ- விளக்கமளித்த காவல்துறை
ஓய்வறையில் இளைஞர் ஒருவரை இரும்பு சங்கிலியால் ஜன்னலில் கட்டி வைத்து காவல்துறையினர் மிகக் கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரைப் பதைபதைக்கச் செய்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல்நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர்களுக்கான ஓய்வு அறையில் இளைஞர் ஒருவரை சங்கிலியால் கைகளை ஜன்னலுடன் கட்டி வைத்து காவலர்கள் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி காண்போரை பதை பதைக்கச் செய்து வருகிறது. இந்த செயலுக்கு மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தை தற்போது நடைபெற்றதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்தி வெளியிட்டு வருகின்றனர். அது உண்மை அல்ல என ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரபூர்வமாக விளக்கமளித்துள்ளது.
கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை என மகாதேவா என்ற இளைஞரை அழைத்துச் சென்ற தாளவாடி காவல்துறையினர், காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள காவலர் ஓய்வறை ஜன்னல் கம்பியில் சங்கிலியால் கைகளைக் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கித் துன்புறுத்தியுள்ளனர்.

