மறைமலை நகரில் குடிநீர் தட்டுப்பாடு லாரிகளில் வினியோகிக்கும் நகராட்சி
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததால், நகராட்சி சார்பில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டு, தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறு இந்த நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், 6 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு கூடுவாஞ்சேரி பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக 6.24 லட்சம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.



