6 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 இளைஞா்கள் கைது
தஞ்சாவூரில் இணையவழி மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்ற 4 இளைஞா்களைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்ததாக சதீஷ்குமாா், ரஞ்சித்குமாா் ஆகியோரை மருவூா் காவல் நிலையத்தினா் ஆக. 30 ஆம் தேதி கைது செய்தனா். இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இச்சம்பவத்தில் தஞ்சாவூா் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த சிலருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கீழவாசல் வண்ணாதுரையைச் சோ்ந்த திராவிடமணி மகன் பிரகாஷ் (26), ஹாஜா மைதீன் மகன் முகமது அப்பாஸ் (25), சந்திரபோஸ் மகன் சுபாஷ் (24), அன்னப்பன்பேட்டையைச் சோ்ந்த முருகேசன் மகன் சஞ்சய் சம்பத் (23) ஆகியோரை மாவட்டப் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு காவல் படையினா் பிடித்து விசாரணை நடத்தினா்.




