Lifestyle and human interest
போதை மாத்திரைகளுடன் இரண்டு பேர் கைது
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில், 400 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பெ.நா.பாளையம் போலீசார், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நரசிம்மநாயக்கன்பாளையம், பாலாஜி நகர், செல்வமாரியம்மன் கோயில் வாட்டர் டேங்க் அருகில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் 400 ஆரஞ்சு நிற டைடல் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா செடி இருந்தது தெரியவந்தது. இருவரும் அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் நகரில் வசிக்கும் ஆனந்த், 24, குமரன் நகர் கவுசிக், 26, என தெரியவந்தது.
மேலும், அவற்றைப் பயன்படுத்துவதோடு, வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.