Volkswagen: `1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்' - வோக்ஸ்வேகன் முடிவின் பின்னணி?
வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய பணிநீக்கமாக 1 லட்சம் ஊழியர்களை வெளியேற்ற வோக்ஸ்வேகன் திட்டமிட்டிருக்கிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேச முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் (Volkswagen), சுமார் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஜெர்மனி மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகள், மின்சார வாகனங்களுக்கான (EV) தேவை குறைவு மற்றும் முக்கியமாக சீன சந்தையில் எழுந்துள்ள கடும் போட்டி காரணமாக ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை மறுசீரமைப்பது அவசியமாகிவிட்டதாக ஆடி (Audi), போர்ஷே (Porsche) உள்ளிட்ட 10 பிராண்டுகளை உள்ளடக்கிய இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

