ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்காமல் புதிதாக ஆட்களை தேர்வு செய்ய எதிர்ப்பு
விருதுநகர்: மின் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் ஆக்காமல் டி.என்.பி.எஸ்.சி., மூலம் புதிதாக தேர்வு செய்வது நியாயமல்ல என மின் ஊழியர் மத்திய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக மின்வாரியத்தில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. கம்பியாளர், உதவியாளர், மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளதால் கூடுதல் பணிச்சுமை உள்ளது.
இதில் ஒப்பந்த ஊழியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். த.வெ.க., தேர்தலுக்கு முன் தனது வாக்குறுதியாக 5 ஆண்டுகளுக்கு மேல் மின் வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றது.
