குப்பை கிடங்கு மண் சரிவுக்கு காரணமான கழிவுநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் மண் கழிவுகள் சரிய காரணமான கழிவுநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. தவிர, நீர்வழி தரைப்பாலங்களில் அடைத்துள்ள கழிவுகளையும் அகற்றி வருகின்றன.
பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையை ஒட்டி, பெருங்குடி குப்பை கிடங்கு 220 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மாநகராட்சியின் ஏழு மண்டலங்களில், தினமும் சேகரிக்கப்படும் 2,700 டன் குப்பை கழிவுகள், இங்கு கொட்டப்பட்டு வருகின்றன.
கடந்த 40 ஆண்டுகளாக குப்பை கொட்டு வருவதால், 35 லட்சம் கன மீட்டர் அளவில் குப்பை தேங்கி உள்ளது.

